வாழைப்பழ திரித்துவம்


*வாழைப்பழ திரித்துவம்* 🍌🥥🥑🫗🐣🌞🌹

பரவலாக பெரிய பெரிய  பாஷ்டர்களிடம், திரித்துவம் என்பதற்கு விளக்கம் கேட்டால், போதுமான திடமான வசன ஆதாரம் இல்லாத காரணத்தால், கோழி முட்டை, நீரின் மூன்று நிலைகள், சூரியன், பூ, வாழைப்பழம், பென்சில், பேனா என்று விதவிதமாக யோசித்து கம்பி கட்டும் கதையெல்லாம் விடுவார்கள். 

யாரெல்லாம் வணக்கத்திற்கும், தொழுகைக்கும் உரியவர்கள் என்று பைபிள் தெளிவாக போதிக்கிறது. 

*கடவுள் ஒருவரே*
கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே *இணைப்பாளரும் ஒருவரே.*
 அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். 
1 திமொத்தேயு 2:5

உண்மையான *ஒரே கடவுளாகிய* உம்மையும் நீர் அனுப்பிய *இயேசு கிறிஸ்துவையும்* அறிவதே நிலைவாழ்வு. 
யோவான் நற்செய்தி 17:3

ஆம். இருவரை பைபிள் குறிப்பிடுகிறது. எங்குமே மூனாவதாக வணக்கத்திற்கு உரிய ஒரு பூத கடவுள் இருப்பதாக இல்லை. 

*பைபிள் கூறும் உண்மை*
பரமபிதா: கடவுள் 
இயேசு கிறிஸ்து: இறைமகனார். 

அல்லேலூயா.  


Comments