#நானும்_பிதாவும்_ஒன்றாயிருக்கிறோம்.
யோவான் 10 :30
இயேசு கிறிஸ்து கூறிய இவ்வார்த்தையை கொண்டு திரித்துவவாதிகள் இயேசு தான் பிதா, பிதா தான் இயேசு என்று கூற முயல்கின்றனர். இதே தவறை தான் அன்றைய யூதர்களும் அவ்வாறே தவறாக புரிந்து கொண்டு தேவதூஷனத்திற்காக அவர் மேல் கல்லெறிய முயன்றனர்.
ஆனால், பின் வரும் வாக்கியங்களில், அவர்கள் நினைப்பது தவறு என்றும் இதற்கான விளக்கத்தையும் அவரே கூறுகிறார்...
வாசிக்கலாம்
"பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற #நான்_என்னைத்_தேவனுடைய_குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?
யோவான் 10 :36
ஆம். அவர்கள் நினைத்தது தவறு என்பதை எவ்வளவு அழகாய் தெளிவாய் கூறுகிறார்.
ஒன்றாய் இருப்பது என்றால் என்ன?
"கணவனும், மனைவியும் இருவரும் #ஒரே_மாம்சமாயிருப்பார்கள், இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்."
மாற்கு 10:8
எப்படி கணவன், மனைவி இருவராய் இருந்தாலும் அவர்கள் நோக்கம், எண்ணம், செயல் பாடு ஒரு வீட்டை கட்ட ஒன்றாய் இருக்க வேண்டுமோ, அது போல பரமபிதாவும் இயேசு கிறிஸ்துவும் திருச்சபையை கட்டும் #ஒரே_சித்தம் உடையவர்கள்.
பைபிள் கூறும் சத்தியம்:
பரமபிதா : கடவுள்
இயேசு கிறிஸ்து : கடவுளின் மகன்
பரிசுத்த ஆவி : கடவுளின் வல்லமை
"இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?"
1 யோவான் 5 :5
மேலும் அறிய
#மெய்_கிறிஸ்தவம்
ta.ChristianityOriginal.com/God
Proclaiming the True Glorious Gospel
This comment has been removed by a blog administrator.
ReplyDelete