#அந்தி_கிறிஸ்து அல்ல
#அந்திகிறிஸ்துக்கள்
#கப்சா : 7 வருடம் ஆட்சி செய்வான் என்பது.
#பொய்யை_பரப்பியது_யார்?
அந்தி கிறிஸ்து என்பவன் ஒரு எதிர்கால தலைவன் என்றும், கிறிஸ்துவின் வருகைக்கு முன் 7 ஆண்டுகள் ஆட்சி புரிவான் என்றும் கிறிஸ்தவ சபைகள் உபதேசிக்கின்றன. அப்படி பைபிளில் எங்குள்ளது என்று தெரியவில்லை.
ஆனால் 1st century இலேயே, அப்போஸ்தலர் யோவான் அடிகளார் எழுதுகிறார்..
" பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது. அந்திகிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் #அநேக_அந்திக் கிறிஸ்துக்கள் இருக்கிறார்கள். அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.
1 யோவான் 2:18"
ஆம். அந்தி கிறிஸ்து ஒருவன் அல்ல. பலர். அதுவும் முதல் நூற்றாண்டிலேயே!!
பல அந்திக்கிறிஸ்துக்கள் முதல் நூற்றாண்டில் இருந்தே இருக்கிறார்கள் என்றால், இப்போது!!!
தானியேல் புத்தகத்தில் உள்ள 70 வார தீர்க்கதரிசனம் (அதிகாரம் 9) என்பது, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை துல்லியமாக முன் அறிவிப்பது.
அதை சில பல காரணங்களால், அந்த தீர்க்கதரிசனம் அந்தி கிறிஸ்துவை குறிப்பது என்று 16 ஆம் நூற்றாண்டில் Protestant சீர்திருத்தம் சமயத்தில் மாற்றி கள்ள உபதேசம் செய்தது கத்தோலிக்க சபை. அதை கொஞ்சமும் உணராமல் அப்படியே இந்த பொய்யை இன்றைய கிறிஸ்தவ சபைகள் உபதேசிப்பது வருத்தத்திற்குரியது.
"இயேசுவைக் கிறிஸ்து (அபிஷேகம் பண்ணபட்டவர்) அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்?
பிதாவையும் குமாரனையும் (பிதா : கடவுள் / இயேசு கிறிஸ்து : கடவுளின் மகன் என்ற அழகான உறவை) மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
1 யோவான் 2:22"
மேலும் அறிய:
நமது மெய் கிறிஸ்தவம் இணையதளம்
விசுவாச துரோகம் என்றால் என்ன?
http://christianityoriginal.com/mp/index.php/ta/deception/greatapostasy
யார் அந்த கேட்டின் மகன்?
http://christianityoriginal.com/mp/index.php/ta/deception/manoflawlessness
Comments
Post a Comment