*#இயேசு_கிறிஸ்துவை_உலக_இரட்சகர்_என்று_அழைக்க_காரணம்:*
🌼கடவுள், இயேசு கிறிஸ்து மூலம் (1 கொரி 8:5) படைத்த முதல் மனிதன் ஆதாம். கடவுள் இட்ட கட்டளையை மீறி கீழ்படியாமை செய்ததால், ஆதாமுக்கும் அவரது வம்ச வழியான நமக்கும் மரணம் ஏற்படுகிறது.
[பாவத்தின் சம்பளம் மரணம். ரோமர் 6:23]
[ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறார்கள்
1 கொரி 15:22]🌼
🌻மனுகுலத்தை மரணத்தில் இருந்து மீட்க கடவுளின் திட்டத்தை பணிவுடன் ஏற்ற இறை மகன் இயேசு, (ஏசாயா 6:8) பூமி வந்து, சிலுவையில் ஆதாமுக்கு ஈடாக தம் உயிரைக் நமக்காக தந்தார்.
[அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். 1 பேதுரு 2:24
*#சர்வலோகத்தின்_பாவங்களையும்* நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். 1 யோவான் 2:2]🌻
🏵️இயேசு கிறிஸ்துவின் இந்த ஈடு இணையற்ற பலியின் பலனால், ஒட்டு மொத்த மனுக்குலமும் அவருடைய இரண்டாம் வருகையில் மீட்பு = உயிர்த்தெழுதல் அடைவர்.
[கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
1 கொரிந்தியர் 15:22]🏵️
ஆம். *#எல்லாரும்*. விசுவாசி, அவிசுவாசி, இந்து, முஸ்லிம், நாத்திகர்,கத்தோலிக்கர், பெந்தெகோஸ்த் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லாரும் அவரின் இரண்டாம் வருகையில் அவர் உயிர்பிப்பார்.
உண்மையிலேயே அவர் உலக இரட்சகர்.
ஆமென்.
Comments
Post a Comment