ஏன் இயேசு கிறிஸ்து மூலமாக ஜெபிக்கிறோம்?

*#நாம்_ஏன்_பரமபிதாவிடம்_இயேசு_கிறிஸ்து_மூலமாக_ஜெபிக்கிறோம்?*

இயேசு: *#நானே_வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், *#என்னாலேயல்லாமல்_ஒருவனும்_பிதாவினிடத்தில்_வரான்.* யோவான் 14:6

தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 1 தீமோத்தேயு 2:15

ஆம். கடவுளின் மகனான இயேசு கிறிஸ்து, நமக்கும் கடவுளுக்கும் இடையில் மத்தியஸ்தர்.
இயேசு கிறிஸ்துவே நாம் கடவுளாம் பரம பிதாவை அடைவதற்கான ஒரே வழி.

நம் பரமபிதா பரிசுத்தர். அவர் பாவிகளுக்கு  செவி சாய்ப்பதில்லை. யோவான் 9:31

அதனால், நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து (பாவிகளான) நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
1 யோவான் 2:1

ஆம். நம் ஜெபங்கள் என்றும் பரமபிதா கேட்பதில்லை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே நம் ஜெபங்களை கேட்டு  பரமபிதாவிடம் கொண்டு செல்கிறார்.

ஆம். கடவுளாம் பரமபிதாவும், இயேசு கிறிஸ்துவின் இரு வேறு ஆள் தத்துவமுள்ளவர்கள்.

பரவலான கிறிஸ்தவ சபைகள் உபதேசிப்பது போல, இயேசு தான் பிதா, பிதா தான் இயேசு என்பது பைபிள் கூறும் அடிப்படை சத்தியத்திற்கு முற்றும் விரோதமானது.

*#பைபிள்_கூறும்_சத்தியம்:*
பரமபிதா : கடவுள்
இயேசு கிறிஸ்து : கடவுளின் மகன்

இயேசுவானவர் கடவுளுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் கடவுள் நிலைத்திருக்கிறார், அவனும் கடவுளில் நிலைத்திருக்கிறான்.
1 யோவான் 4:15

Comments