அக்கினி கடலில் போடுவாரா?


*#நீங்கள்_பகுத்தறிவு_உள்ளவர்களாய்_இருங்கள்*
யூதா 1:22

"தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் *#அக்கினியிலே_தகனிக்கிறதற்காக,* அவர்கள் *#இன்னோம்_பள்ளத்தாக்கிலுள்ள* தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; யூதாவைப் பாவஞ்செய்யப்பண்ணுவதற்கு அவர்கள் இந்த *#அருவருப்பான" காரியத்தைச் செய்யவேண்டுமென்று நான் அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அது என் *#மனதிலே_தோன்றினதுமில்லை.*
எரேமியா 7 :31, 32:35

இங்கு இன்னோம் பள்ளத்தாக்கு என்பது புதிய ஏற்பாடு எழுதப்பட்டுள்ள கிரேக்க மொழியில் *#GEHENNA* என்று வழங்கப்படும்.
இது இஸ்ரேல் நாட்டில் உள்ள ஒரு *#பள்ளத்தாக்கின்_பெயர்*.

*#Google_Earth* ல கூட பார்க்கலாம்.

இந்த GEHENNA என்பது தான் தமிழ் பைபிளில் *#அக்கினிகடல்* (நரகம்) என்று தவறாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.
இந்த GEHENNA என்ற பெயர்ச்சொல், இரண்டாம் மரணத்திற்கு அடையாள உவமையாக பைபிளில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

மனிதர்களை அக்கினியில் தகணிப்பது தமக்கு அருவருப்பான காரியம் என்று  கடவுளாம் பரம பிதாவே மேலுள்ள வசனங்கள் மூலம் கூறுகிறார். ஆனால், கிறிஸ்தவ சபைகளில் கிறிஸ்துவை அறியாத நம் அன்புக்குரிய இந்து, இஸ்லாம் சகோதரர்களை கடவுளாம் பரம பிதா அக்கினியில் போட்டு காலம் முழுவதும் வதைப்பார் என்பது எத்துணை அபத்தமான கூற்று.

அருவருப்பு என்று கூறும் காரியத்தை அவரே செய்வாரா?

மேலும் *#கல்லறை* என்று பொருள் படும் *#SHEOL* (Hebrew) *#HADES* (Greek) வார்த்தைகள் நரகம், பாதாளம் என்று முற்றிலும் தவறாக மொழி பெயர்க்க பட்டுள்ளது.

இந்த மொழி பெயர்ப்பு உணரப்பட்டு, புதிய ஆங்கில மொழி பெயர்ப்பு களில் இருந்து, Hell என்கிற வார்த்தை முற்றிலும் நீக்கப்பட்டு விட்டது.

நரகம் என்பது கர்ப்பணை பிற மத கோட்பாடு. முற்றிலும் மொழி பெயர்ப்பு பிழையால் பைபிளில் வந்தது.

Comments