அக்கிரம செய்கை காரர்கள் யார்?

*#இயேசு_கிறிஸ்து: *#அக்கிரம_செய்கைகாரரே_என்னை_விட்டு_அகன்று_போங்கள்*. மத்தேயு 7:23

இன்றைய காலங்களில், பலர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள், பேய் ஓட்டுகிறார்கள், அற்புத அடையாளங்கள் செய்கிறார்கள்.

✓ இயேசு கிறிஸ்து கூறுகிறார், அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! *#உமது_நாமத்தினாலே* *#தீர்க்கதரிசனம்* உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே *#பிசாசுகளைத் துரத்தினோம்* அல்லவா? உமது நாமத்தினாலே அநேக *#அற்புதங்களைச்_செய்தோம்* அல்லவா? என்பார்கள்.

அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, *#அக்கிரமச்_செய்கைக்காரரே*, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். மத்தேயு 7:22, 23

பவுல் அடிகளார் முன்மொழிந்தது போல, அனைத்து அற்புத வரங்களும் *#நிறைவான_பைபிள்* வந்தவுடன் ஒழிந்து போயிற்று.

✓நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம். அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம்,
1 கொரிந்தியர் 13:8,10

ஆம். அன்பு சகோதரியே சகோதரரே, இன்றைய காலங்களில் நடக்கும் அற்புத அடையாளங்கள் அனைத்துமே பிசாசின் வஞ்சனைகள்.

உங்கள் முன்னிலையிலேயே, அற்புதம்  நடப்பதை கண்டாலும், சொன்ன தீர்க்கதரிசனம் நடந்தாலும் அவற்றை நம்பாதீர்கள். அவை பிசாசினாலே செய்ய படுபவை.

✓உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், *#அவன்_சொன்ன_அடையாளமும்_அற்புதமும்_நடந்தாலும்,

✓அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் *#கேளாதிருப்பீர்களாக,* உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் *#அன்புகூறுகிறீர்களோ_இல்லையோ* என்று அறியும்படிக்கு உங்கள் *#தேவனாகிய_கர்த்தர்* உங்களைச் *#சோதிக்கிறார்.* உபாகமம் 13:2,3

நம் கடவுளாம் பரமபிதாவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தங்களை வழி நடத்துவார்களாக.

*Slaves of Christ*
9551003300,9942664340
TamilChristianMemes.blogspot.com

Comments