திரித்துவம்

*#திரித்துவம்*

பரவலான கிறிஸ்தவ சபைகளில் மூன்று தலை கடவுள் கோட்பாடான  திரித்துவம் (3 in 1) மற்றும் அதன் பிரிவான திரியேகம் (1 in 3), ஏகத்துவம்(1 in 3 Forms) மற்றும் பல விசித்திரமான பிற மதங்களில் இருந்து உள்வாங்கிய கோட்பாடுகள் பின்பற்றப்படுகிறது.

திரித்துவத்தை விளக்கும் அதனேசியன் பிரமானமானது, பிதா குமாரன் ஆவியானவர் என்று மூன்று வெவ்வேறு கடவுள்கள் உண்டு என்று சொல்லி, அந்த மூவரும் ஒருவர் என்றும் கூறுகிறது. இதன் விளக்கத்தை கேட்டால்,  தெய்வத்துவத்தை புரிந்து கொள்ள இயலாது என்று எஸ்கேப் ஆகின்றனர்.

✓ இயேசு கிறிஸ்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், *#நம்முடைய_பிதாவாகிய_கடவுள்_ஒருவரே_கடவுள்.* மாற்கு 12:29

✓ *#இயேசு_தேவனுடைய_குமாரனாகிய_கிறிஸ்து* என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாக, இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. யோவான் 20:31

✓ தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: *#பரிசுத்தஆவி* உன்மேல் வரும், *#உன்னதமானவருடைய_பலம்* உன்மேல் நிழலிடும், லூக்கா 1:35

ஆம். பிதாவாகிய கடவுள் ஒருவரே கடவுள், இயேசு கிறிஸ்து, கடவுளின் மகன் என்பதே பைபிள் கூறும் அழகான விசுவாசம். பரிசுத்த ஆவி: கடவுளின் வல்லமை. தனி நபர் அல்ல.

இயேசு கிறிஸ்து: நீங்கள் அறியாததைக் தொழுதுகொள்ளுகிறீர்கள். உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் *#பிதாவை_ஆவியோடும்_உண்மையோடும்_தொழுதுகொள்ள_வேண்டும்.* யோவான் 4:3

TamilChristianMemes.blogspot.com

Comments