நற்குனசாலி யார்?

*#நற்குணசாலி_யார்?*

பரவலாக கிறிஸ்தவர் களிடத்தில் ஒரு பயம் உண்டு. தங்களது "பாஸ்டர்" கூறாததை யாராவது கூறினால் கள்ள உபதேசமாக இருக்குமோவென்று.. அந்த பயத்தை களையுங்கள்.

பெராயா பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் *#நற்குணசாலிகளாயிருந்தார்கள்.*
அப்போஸ்தலர் 17:11

*#விவாதிப்போம்_வாருங்கள்* என்று கர்த்தர் சொல்லுகிறார். (ஏசாயா 1:18) -

மனிதனின் பகுத்தறிவை முடக்க முயலும் நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள் போல் அல்லாமல், வாசகர்களைப் பகுத்தறிந்து விவாதிக்க அழைக்கும் ஒரே நூல் உலகத்திலேயே புனித வேதாகமம் மட்டும்தான்!
தன்னுடன் விவாதிக்க அழைக்கும் கடவுளின் அழைப்பை (பணிவுடன்) மகிழ்ச்சியுடன் ஏற்று அவரது வார்த்தையைக் கவனமாய் ஆராய்ந்து படித்தால் மட்டுமே, பைபிளில் கடவுள் ஒளித்து வைத்திருக்கும் மறை பொருட்களை அறிய முடியும்.

காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை: காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை. நீதிமொழிகள் 25:2

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: யோவான் 5:39

ஆம். சுய வேத ஆராய்ச்சி/சரி பார்த்தல் மிக முக்கியம். வாழ்த்துக்கள்.

TamilChristianMemes.blogspot.com

Comments