Black money

*#உங்கள்_கைகளிலுள்ள_காணிக்கை_எனக்கு_உகந்ததல்ல.* மல்கியா 1:10

பெந்தெகோஸ்தே சபைகளில் நடக்கும் TERA மோசடி : தசமபாகம்

பரவலான பெந்தேகோஸ்தே சபைகளில், சபை நடத்தும் "பாஸ்டர்கள்" மற்றும் "ரெவேரண்டுகள்" தங்களுக்கு தசமபாகம் என்கிற பெயரில் மாத சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கை தந்தால், கடவுள் வானத்தின் பலகனிகளை திறந்து ஆசீர்வாதத்தை கொட்டோ கொட்டோ என்று கொட்டுவார் என்று வேத வாக்கியங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றி  உபதேசிக்கிறார் கள்.

மக்களும் பைபிள் வாக்கியங்களை சரியாக பகுத்தறிந்து அறியாமல்,  தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்பதை சற்றும் உணராமல் "தசமபாகம்" கொடுப்பதை தங்களது தலையாகிய கடமை என்று எண்ணி பயபக்தியுடன் இழக்கின்றனர்.

இயேசு கிறிஸ்து, சிலுவையில் மரித்தது வீண் என்று தங்களது செயலால் அறிக்கை யிடுகின்றனர்.
நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே. கலாத்தியர் 2:21

இவ்வாறு முறையற்ற விதத்தில் நடக்கும் இந்த  பண பரிமாற்றத்திற்கு,  கணக்கும் கிடையாது, எந்த வித முறையான ரசீதும் தரப்படுவதில்லை.
Protestant சபைகளில் உள்ளது போல, கமிட்டியோ காஷியரோ கிடையாது. சபை மக்களும் எந்த வித கணக்கும் கேட்பதில்லை. முறையான கணக்கு இல்லாதமையினால் வருமான வரி செலுத்துவதில்லை.

அதனால் ஏழை விசுவாசிகளின் பணம் சட்டத்திற்கு விரோதமான *#கருப்பு_பணம்* ஆகிறது.

நசல் பிடித்ததை கொண்டு வந்து அது பொல்லாப்பல்ல என்கிறீர்கள்.
நசல்கொண்டதை கொண்டு வந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக் கொள்வேனோ என்று கர்த்தர் கேட்கிறார். மல்கியா 1:8,13

Comments