#மனம்_திருந்துதல்_எதில்_இருந்து?
#நாம்_அனைவரும்_பாவிகளே - #ஒத்துக்கொள்வோம்
இயேசு கிறிஸ்து, பூமியில் மனிதனாக இருந்த காலத்தில், பரிசெயர் சதுசெயர் என்ற பிரிவினர் தாங்கள் நீதிமான்கள், தாங்கள் பாவமற்றவர்கள் என்று காட்டி கொண்டனர்.
ஆனால், அவ்வாறு நினைப்புள்ளவர்களை இயேசு கிறிஸ்து கடுமையாக சாட்டினார்.
வாசிக்கலாம்..
"வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். "
"இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை."
"#நீதிமான்(என்று எண்ணிக் கொள்பவர் ) களையல்ல, #பாவி(என்று ஒத்து கொள்பவர்) களையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். "
லூக்கா 5 :32
இன்றும் கூட, நாங்கள் "இரட்சிக்கப்ட்டவர்கள்" எங்களிடம் பாவமில்லை, நாங்கள் பரிசுத்தவான்கள் என்று அனேகர் பிதற்றுகிறார்கள். அவர்களை பற்றி பைபிள்..
" நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. "
"#நாம்_பாவஞ்செய்யவில்லை_யென்போமானால்_நாம்_கடவுளை_பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்.
1 யோவான் 1 :10
ஆம். #நாங்கள்_இரட்சிக்கபட்டோம்_என்பவர்கள்_கடவுளாம்_பரமபிதாவையே_பொய்யராக்குகிறார்கள்.
நாம் உயிர்த்தெழுந்த பின்பு தான் நாம் இரட்சிக்கபட்டு பரலோகம் வாய்ப்பு பெற்றோமா என்பது நமக்கு தெரியும்.
#மனம்_திருந்துவோம்...
மனிதர் அனைவரும் பாவிகளே.
நாமே நம்மை நீதிமான் ஆக்க முடியாது.
"நான் ஒரு பாவி" என்று ஒத்து கொண்டு எனக்கு ஒரு மீட்பர் இரட்சகர் இருந்தால் மட்டுமே நான் நித்திய ஜீவன் பெற முடியும் என்று நம்மை தாழ்த்துவோம்.
"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். "
1 யோவான் 1 :9
அனுதினமும் நம்மை தாழ்த்தி நம் பாவங்களை அறிக்கையிட்டு நம்மை சுத்திகரிப்போம்.
மேலும் அறிய:
#மெய்_கிறிஸ்தவம்
ta.ChristianityOriginal.com/sinners
Comments
Post a Comment