#நற்செய்தி (உண்மையிலேயே)
எல்லாருக்கும்_மீட்பு_நிச்சயம்
#எல்லா_மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
1 தீமோத்தேயு 4 :10
"தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான். "
ரோமர் 3 :29
"எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். "
1 தீமோத்தேயு 2 :4
"மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்."
லூக்கா 3 :5
ஆம். மனுக்குலம் அனைத்தும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் பூமியில் உயிர்த்தெழுந்து (1 கொரிந்தியர் 15:21) திருச்சபையால் 1000 வருடம் ஆளப்பட்டு நீதி கற்பார்கள் (ஏசாயா 26:9, வெளி 20:6) என்பதே பைபிள் கூறும் உண்மையான நற்செய்தி.
கடவுளின் ராஜ்ஜியம் வருவதாக..
கடவுளின் சித்தம் பரலோகத்தில் செய்ய படுவது போல
பூமியிலும் செய்யப் படுவதாக...
ஆமென்.
மேலும் அறிய:
மெய் கிறிஸ்தவம்
ta.ChristianityOriginal.com
Comments
Post a Comment