பரமபிதாவின் குணநலன்கள்

நம் பரமபிதாவின் குணநலன்கள்:
#சாவாமை_உடையவர்
#சேரக்கூடாத_ஒளியில்_வாசம்_செய்பவர்(பரலோகத்தில்)
#ஒருவரும்_கண்டிராதவர்
#ஒருவரும்_கானகூடாதவர்
#கட்புலணாகாதவர் (INVISIBLE)

ஆதார வசனங்கள்:
"ஒருவராய், #சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் #கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
1 தீமோத்தேயு 6 :16

"#நித்தியமும் #அழிவில்லாமையும் #அதரிசனமுள்ள (invisible) ராஐனுமாய், தாம் #ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். "
1 தீமோத்தேயு 1 :17

ஆம். நம் ஒரே கடவுளாம் பரமபிதா, #சா_வா_மை உடையவர்.  அதனாலேயே, தம் ஒரே பேறான குமாரனாம் இயேசு கிறிஸ்துவை மனுகுலத்தை மரணத்தில் இருந்து மீட்க #ஈடுபலியாய் அளித்தார்.

"கடவுள், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."
யோவான் 3:16

ஆனால், கிறிஸ்தவ சபைகளில் இயேசு தான் பிதா, பிதா தான் இயேசு என்று கூறும் திரித்துவக் கோட்பாட்டை உபதேசித்து நம் உண்மையான #மெய்யான_கடவுளாம்_பரமபிதாவை விசுவாசிகளின் கண்களில் இருந்து மறைப்பது வருத்தத்திற்கு உரியது.

#இயேசு_இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?
1 யோவான் 5 :5

பைபிள் கூறும் சத்தியம்:
பரம பிதா - கடவுள்
இயேசு கிறிஸ்து- கடவுளின் மகன்

மேலும் அறிய
#மெய்_கிறிஸ்தவம்
ta.ChristianityOriginal.com/HeavenlyFather

Comments