#உங்கள்_பாரம்பரியத்தினாலே_கடவுளின்_கற்பனையை_அவமாக்கிவருகிறீர்கள்
மத்தேயு 15 :6
#முதல்_கட்டளை
சர்வ வல்ல பரமபிதா: "என்னையன்றி உனக்கு வேறே கடவுள்கள் உண்டாயிருக்கவேண்டாம்."
யாத்திராகமம் 20 :3
#பிரதான_கற்பணை
இயேசு கிறிஸ்து: "கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். (மூவர் அல்ல)
மாற்கு 12 :29
பைபிள், நம் பரமபிதா ஒருவரே கடவுள் என்று அழுத்தம் திருத்தமாக கூறியும் பரவலான கிறிஸ்தவ சபைகளில் பைபிளில் எங்குமே கூறப்படாத, சத்தியத்திற்கு புறம்பான
மூன்று கடவுள் / மூன்றில் ஒன்று / ஒன்றில் மூன்று என்ற விதவிதமான விசித்திரமான கோட்பாட்டை உபதேசித்து பைபிள் கூறுவதை துணிகரமாக அவமாக்குவது வருத்தமே.
வாசிக்கலாம்...
#பிதாவாகிய_ஒரே_தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது. #இயேசுகிறிஸ்து_என்னும்_ஒரே_கர்த்தரும்_நமக்குண்டு. அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது,
1 கொரிந்தியர் 8 :5,6
#ஒன்றான_மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
யோவான் 17:3
#இயேசு_கிறிஸ்து_யார்?
#இயேசுவானவர்_கடவுளுடைய_குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
1 யோவான் 5 :5
ஆம்.
#பைபிள்_கூறும்_சத்தியம்:
பரமபிதா : கடவுள்
இயேசு கிறிஸ்து : கடவுளின் மகன்
பரிசுத்த ஆவி : கடவுளின் வல்லமை = உன்னதத்திலிருந்து வரும் பெலன்.
தனி நபர் அல்ல.
தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: #பரிசுத்தஆவி உன்மேல் வரும், #உன்னதமானவருடைய_பலம் உன்மேல் நிழலிடும்.
லூக்கா 1:35
"மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை, தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! "
எசேக்கியேல் 34 :2
மேலும் அறிய:
#மெய்_கிறிஸ்தவம்
ta.ChristianityOriginal.com/HeavenlyFather
Comments
Post a Comment