ஊழியக்காரன் = வேலைக்காரன்

ஊழியக்காரன் = #வேலைக்காரன்

இன்றைய காலத்தில் பலர் கடவுளுக்கு ஊழியம் செய்கிறேன்  என்கிற பேரில் செய்கிற அலப்பறைகளை நாம் அனுதினமும் பார்க்கும் வாடிக்கையாகி விட்டது.

#கிறிஸ்து_நமக்கு_காட்டும்_வழி:
"ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களை கழுவின துண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்"
யோவான் 13:14

#அப்போஸ்தலர்_பவுல்:
"சிறுபிள்ளை களே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் நான் #கர்பவேதனைபடுகிறேன்."
கலாத்தியர் 4:19

"சகோதரரே, நாங்கள் பட்ட #பிரயாசமும் #வருத்தமும் உங்களுக்கு ஞாபகம் இருக்கும். உங்களில் ஒருவனுக்கும் பாரமாய் இராத படிக்கு, நாங்கள் இரவும் பகலும் வேலை செய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்கு பிரசங்கித்தோம்."
1 தெசலோனிக்கேயர் 2:9

அற்ப சந்தோஷங் களுக்காகவும், ஆதாயத் திற்காகவும் (பணம்) பைபிளை பயன் படுத்துவோர் நாள் தோறும் பெருகி வருகிறார்கள். குடும்ப தொழிலாக மாற்றியவர்களும் உண்டு.

கிறிஸ்துவை விசுவாசி க்கும் அனைவருக்கும் அவரின் ஊழியத்தில் பங்கு உண்டு. காலங் காலமாக ஒரே இடத்தில் உட்கார்ந்து ஒரே பிரசங்கத்தை கேட்டு, ஒருவரிடம் பணத்தை இழக்க நாம் அழைக்க படவில்லை.

இயேசு கிறிஸ்து: "ஒருவன் என் பின்னே வர விரும்பினால், தன்னை தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்து கொண்டு என்னை பின் பற்ற கடவன்"
மத்தேயு 16:24

சிலுவையை சுமக்க நீங்க ரெடியா??

மேலும் வாசிக்க..
#மெய்_கிறிஸ்தவம்
ta.ChristianityOriginal.com/Preach

TamilChristianMemes.blogspot.com

Comments