இயேசு, “பிணியாளிகளுக்கு வைத்தியன் தேவையேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு தேவையில்லை. தாம் நீதிமான்கள் (என எண்ணிக்கொள்கிறவர்களை) அல்ல, பாவிகள் (ta.ChristianityOriginal.com/Sinners - என தம்மை ஒத்துக்கொள்கிறவர்களையே) மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்,” என்றார். மத்தேயு9:12-13.
கிறிஸ்துவின் மீட்பு நீதிமான்களுக்கு கொடுக்கப்படும் சன்மானமா?
இல்லை! அது குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் இலவச பரிசு.
“நீதிமானுக்காகக்கூட ஒருவன் உயிர் கொடுப்பது அரிது. ஆனால் நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக தன் உயிர் கொடுத்தார். ஓர் மனுஷனால் (ஆதாம்) மரணம் உண்டானபடியால், ஓர் மனுஷனால் (கிறிஸ்து) மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.
ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” 1கொரிந்தியர்15:21-22, ரோமர்5:7-8,12.
#இராஜ்யம் இயேசு பூமி திரும்பும்போது, (ஆதாம் உட்பட) மனிதர் யாவரும் உயிர்த்தெழுவர். அவர், தன்னைப் பின்பற்றியோர் தம்முடன் அரியணை வீற்றிருக்க, உயிர்த்தெழுந்த மனுக்குலத்தை இரும்புச்செங்கோலால் ஆட்சி [ta.ChristianityOriginal.com/Kingdom] செய்து, நீதி கற்றுக்கொடுப்பார். [வெளி2:26-27, ஏசாயா26:9]. அவர் இராஜ்யம் வருவதாக!
TamilChristianMemes.blogspot.com
Comments
Post a Comment