இரண்டு மீட்புகள்

#பைபிள்_கூறும்_இரண்டு_மீட்புகள் (உயிர்த்தெழுதல்கள்)

1. #முதலாம்_உயிர்த்தெழுதல் = விசேஷ மீட்பு = பரலோக வாய்ப்பு பெரும் சிறுகூட்டம் = சிறுமந்தை = திருச்சபை = கிறிஸ்துவோடு 1000 வருடம் அரசாளும் வாய்ப்பு

2. #பொதுவான_உயிர்த்தெழுதல் = பூமியில் ஏனையோர் உயிர்த்தெழுதல்

ஆதார_வசனங்கள்:
#எல்லா_மனுஷருக்கும், (பொதுவான உயிர்த்தெழுதல்)
#விசேஷமாக_விசுவாசிகளுக்கும் (முதலாம் உயிர்த்தெழுதல் = திருச்சபை) இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம். "
1 தீமோ 4 :10

"பிரியமானவர்களே,
#பொதுவான_இரட்சிப்பைக் குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், #பரிசுத்தவான்களுக்கு (முதலாம் உயிர்த்தெழுதல்) ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக ...."
யூதா 1:3

ஆம். இயேசு கிறிஸ்துவின் சிலுவை மீட்பின் பலனால் மனிதர் யாவரும் அவரின் இரண்டாம் வருகையில் உயிர்த்தெழுவர்.
"ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, #கிறிஸ்துவுக்குள்_எல்லாரும்_உயிர்ப்பிக்கப்படுவார்கள். "
1 கொரி 15 :22

#உயிர்த்தெழுதல்_இரண்டு_முறையாய் _நடைபெறும்.
முதலில் உயிர்த்தெழுவோர் பரலோக வாய்ப்பு பெற்று கிறிஸ்துவோடு அரசாளுவர்.

பின்பு, உலகில் உள்ள ஏனையோர் நியாய தீர்ப்புக்கு இதே பூமியில் உயிர்த்தெழுவார்கள்.

"#முதலாம்_உயிர்த்தெழுதலுக்குப்_பங்குள்ளவன்_பாக்கியவானும்"பரிசுத்தவானுமாயிருக்கிறான், இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட #ஆயிரம்_வருஷம்_அரசாளுவார்கள்.
வெளி 20:6

#யாரை_அரசாளுவார்கள்?
நியாயத்தீர்ப்புக்கு பூமியில் உயிர்த்தெழும் ஏனையோரை.

#நியாயத்தீர்ப்பு_நாளில்_என்ன_நடக்கும்?
"உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும் போது பூச்சக்கரத்துக்குடிகள் #நீதியைக்_கற்றுக்கொள்வார்கள்.
ஏசா 26 :9

ஆம். நியாயத்தீர்ப்பு நாள் என்பது ஒரு சோதனை காலம் மட்டுமல்ல. மாறாக அது நீதி கற்று கொள்ளும் காலமும் கூட
அப்போது...
"சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், #பூமி_கர்த்தரை_அறிகிற_அறிவினால்_நிறைந்திருக்கும்."
ஏசா 11:9

ஆம். அப்போது உண்மையான கடவுளாம் பரமபிதாவை அனைவரும் அறிந்திருப்பார்கள்.

#ஜெபிப்போம்:
பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே..
உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக.
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யபடுவது போல பூமியிலும் செய்யபடுவதாக. ஆமென்.

மேலும் அறிய
ta.ChristianityOriginal.com/Kingdom

Comments

  1. ஆயிர வருட அரசாட்சியில் பூமியில் உயிர்த்தெழுப்பபடும் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்வார்களா?

    ReplyDelete

Post a Comment