#மெய்யாகவே_இதோ_வேதபாரகரின்_கள்ள_எழுத்தாணி_வேதத்தை_அபத்தமாக்குகிறது.
எரேமியா 8 :8
#மூல_பைபிளில்_நரகம்_என்கிற_வார்த்தையே_இல்லை.
பரவலான கிறிஸ்தவ சபைகளில் உள்ள ரெவரண்டுகள், பாஸ்டர்கள், பிரசங்கியார்கள் ஒருவர் கிறிஸ்துவை ஏற்று கொண்டிருந்தால் பரலோகம் செல்வர் என்றும் இல்லையென்றால் #நரகம்_செல்வர் என்றும் போதிக்கிறார்கள். அப்படி என்றால் நம்மை சுற்றி இருக்கும் நம் அன்புக்குரிய இந்து, இஸ்லாம, நாத்திக சகோதரர்கள் அனைவரும் நரகம் செல்வார்களா???
ஆனால் வேடிக்கை என்ன வென்றால்,
மூல பைபிளில் நரகம் என்கிற வார்த்தையை இல்லை. 😂
"#மூடப்பட்ட_இடம்" அல்லது "கல்லறை" என்று பொருள் படும்
#SHEOL என்கிற எபிரேய வார்த்தையும், #HADES என்கிற கிரேக்க வார்த்தையும் "நரகம், பாதாளம்" என்று முற்றிலும் தவறாக மொழி பெயர்க்க பட்டுள்ளது.
ஆம். இறந்தவுடன் SHEOL கல்லறை செல்வர் என்று தான் மூல பைபிளில் உள்ளது. ஆனால் மொழி பெயர்ப்பாளர்கள் இறந்தவுடன் பாதாளம் செல்வர் என்று மொழி பெயர்த்து விட்டனர்.
#GEHENNA என்ற அன்றைய ஜெருசலேம் நகரின் குப்பை எரிக்கும் பள்ளத்தாக்கின் பெயர் Lake of Fire #அக்னிகடல் என்று முற்றிலும் தவறாக மொழி பெயர்க்க பட்டுள்ளது.
Gehenna என்ற நெருப்பு எரிந்து கொண்டே இருக்கும் பள்ளத்தாக்கில் ஒரு முறை ஒரு பொருளை போட்டால் எப்படி எடுக்க முடியாதோ, இரண்டாம் மரணத்தில் இறப்போர் நித்தியமாக அழிவர்(மீண்டும் உயிர்த்தெழுதல் இல்லை) என்பதை குறிக்கும் வண்ணமாக #Gehenna_அடையாள_உவமை யாக இயேசு கிறிஸ்து பயன் படுத்தினார்.
"நரகம்" என்பது ஒரு கர்ப்பணை பிற மத கோட்பாடு. மொழி பெயர்ப்பு பிழையால் நம் பைபிளில் வந்தது.
அதனால் தான் பல புதிய ஆங்கில பைபிள் மொழி பெயர்ப்புகளில் (YLT, WEYMOUTH, ROTHERHAM, ASV, NASV)) இருந்து நரகம் என்கிற வார்த்தை முற்றிலும் நீக்கப் பட்டு விட்டது.
இவ்வாறு தவறு நடக்கும் என்று பைபிள் தீர்க்க தரிசன மாக முன் அறிவிக்கின்றது:
"நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி? மெய்யாகவே, இதோ, #வேதபாரகரின்_கள்ள_எழுத்தாணி #வேதத்தை_அபத்தமாக்குகிறது. "
ஏரேமியா 8:8
மேலும் அறிய:
#மெய்_கிறிஸ்தவம்
ta.ChristianityOriginal.com/Sheol
YouTube
https://youtu.be/JSgPGhbps4Y
Comments
Post a Comment