*#கடவுளின்_ராஜ்ஜியம் வர போகுது* 😀
இயேசு கிறிஸ்து, முன் அறிவித்த படி, மிக விரைவில் அவரது இரண்டாம் வருகையில் பூமியில் நீதி வாசமாய் இருக்கும் அவரது ராஜ்ஜியம் (ஆயிரம் வருட அரசாட்சி) ஸ்தாபிக்க படும்.
"இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: *மெய்யாகவே_நான்_சீக்கிரமாய்_வருகிறேன்* என்றார்."
வெளிப்படுத்தின விசேஷம் 22:20
"அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்."
2 பேதுரு 3:13
# *உயிர்த்தெழுதல்*
அப்போது மனிதர் அனைவரும் உயிர்த்தெழுவர். அவர்கள் பரலோக வாய்ப்பு பெரும் சிறு கூட்டமாகிய திருச்சபையால் கிறிஸ்துவின் கீழ் அரசாளப்பட்டு நீதி கற்றுக் கடவுளாம் பரம பிதாவை அறிகிற அறிவினால் நிறைந்திருப்பர்.
"கிறிஸ்துவுக்குள் # *எல்லாரும்_உயிர்ப்பிக்கப்படுவார்கள்* ." 1 கொரிந்தியர் 15 :22
"உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும் போது பூச்சக்கரத்துக்குடிகள் *நீதியைக்_கற்றுக்கொள்வார்கள்* . "
ஏசாயா 26 :9
சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், *பூமி_கர்த்தரை_அறிகிற_அறிவினால்_நிறைந்திருக்கும்* .
ஏசாயா 11 :9
அப்போது இயேசு கிறிஸ்து, முன் அறிவித்த படி அனைவரும் நம் கடவுளாம் பரமபிதாவை தொழுது கொள்வர்
இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, # *எங்கும்_பிதாவைத்_தொழுதுகொள்ளுங்_காலம்_வருகிறது* .
யோவான் 4 :21
# *ஜெபிப்போம்* :
பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே,
உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக..
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்ய படுவது போல பூமியிலும் செய்ய படுவதாக. ஆமென்.
மேலும் அறிய: *மெய்_கிறிஸ்தவம்*
ta.ChristianityOriginal.com/Kingdom
Comments
Post a Comment