*#அச்சம்தவிர்:*
சாமுவேல் ஜி. டாசன் 'நரகம் பற்றி இயேசுவின் போதனை' புத்தகத்தில், "நரகம் ரோமன் கத்தோலிக்க சபை புனைந்த கட்டுக்கதை (http://ta.ChristianityOriginal.com/Hell) ஆகும்.
ஆச்சரியப்படும் வகையில், நரகம் பற்றின பிரபலமான பெரும்பாலான கோட்பாடுகள் ரோமன் கத்தோலிக்க நூலாசிரியர்களின் எழுத்துக்களில் தான் காணப்படுகின்றன. முக்கிய உதாரணம் இத்தாலிய கவிஞர் டான்டே அலிகியரி (கி.பி.1265-1321). இவர்தான் [நரகம் பற்றி விலாவரியாக விவரிக்கும்] 'டான்டேயின் நரகம்' எழுதியவர்.
ஆனால் இயேசு கிறிஸ்துவின் போதனையில் நரகத்தை பற்றி இதுபோன்ற கருத்துகள் எதுவும் காணப்படவில்லை!" என்று எழுதுகிறார்.
ஆம், 'நரகம்' ஒரிஜினல் பைபிளில் இல்லை. கல்லறை என்கிற எபிரேய 'ஷியோல்' வார்த்தையும், 'கெஹன்னா' என்ற கிரேக்க வார்த்தையும் 'நரகம்' என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
'கெஹன்னா' நரகம் என்றால் நாம் விமான டிக்கெட் எடுத்து அங்கே செல்ல முடியும்! ஆம், அது ஒரு நிஜ இடம். எருசலேம் மாநகரின் குப்பையெரிக்கும் பேட்டையின் பெயர்தான் கெஹன்னா.
இயேசு, 'கெஹன்னாவில் எரியும் தீ' என்று சொல்வது ஒரு சென்னை நகரவாசி 'சைதாப்பேட்டையில் எரியும் தீ' என்று சொல்வதுபோல்தான்! இயேசுநாதர் நரகம் என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை.
*#மெய்கிறிஸ்தவம்பழகு:* செத்தோர் யாவரும் "ஷியோல்" (கல்லறை) செல்வர். இயேசு ஆதாமிற்கு பதிலாக தன்னுயிரை கிரயமாக கொடுத்ததால், அவரது இராஜ்யம் வரும்போது ஆதாமின் வம்சம் (மனிதர் அனைவரும்!) உயிர்த்தெழுவர். ஆம், இழந்துபோன அன்பிற்குரியவர்களை அனைவரும் மீண்டும் சந்திப்பர்!
*#இராஜ்யம்:* இயேசுவும் அவரைப் பின்பற்றியோரும் செங்கோல் ஆட்சி செய்து, உயிர்த்தெழுந்த மனுக்குலத்திற்கு நீதி கற்றுக்கொடுப்பர் (http://ta.ChristianityOriginal.com/Kingdom). அப்போதும் கீழ்ப்படியாதார் (அக்கினி கடல் உவமை குறிக்கும்) "கெஹன்னா"வில் இரண்டாம் மரணம் அடைவர்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete