#நாவினால்_சுட்ட_வடு
#சத்தியம்_உங்களை_விடுதலை_ஆக்கும்
#உம்முடைய_வசனமே_சத்தியம்
பரவலாக மூன்று கடவுள் கோட்பாடான திரித்துவம், திரியேகம், ஏகத்துவம் பற்றி பேசவோ அல்லது அதன் உண்மை தன்மையை வேத வாக்கியங்களோடு ஆராயவோ பலர் தயங்குகின்றனர்.
காரணம்... அந்தி கிறிஸ்து, Cult, Heretic, J witnesses என்பது போன்ற பழி சொற்கள் அவர்கள் கேட்க நேரிடும் என்கிற பயம்.
ரோம கத்தோலிக்க மற்றும் பிராட்டஸ்டன்ட் சபையினர் அக்காலத்தில் திரித்துவத்தை ஏற்காதவர்களை எரித்து கொலை செய்தனர். #இப்போதும் கிறிஸ்தவம் என்ற போர்வையில் இருக்கும் சபையினர் வார்த்தைகளினால் எரித்து கொல்வது தினசரி வாடிக்கை ஆகிவிட்டது.
ஆனால் கடவுளாம் பரம பிதாவின் திட்டம் வேறு,
"எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி #உலகமானது_சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், #பைத்தியமாகத்_தோன்றுகிற_பிரசங்கத்தினாலே_விசுவாசிகளை_இரட்சிக்கத்_தேவனுக்குப்_பிரியமாயிற்று."
1 கொரிந்தியர் 1:21
#ஞானிகளை_வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் #பைத்தியமானவைகளைத்_தெரிந்துகொண்டார். பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் #உலகத்தில்_பலவீனமானவைகளைத்_தெரிந்துகொண்டார்.
1 கொரிந்தியர் 1:27
"சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது."
ரோமர் 1:18
#பைபிள்_கூறும்_சத்தியம்:
#ஒன்றான_மெய்த்தேவனாகிய பரமபிதாவையும் அவர் அனுப்பினவராகிய தம் குமாரணாம் #இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
யோவான் 17:3
பரமபிதா : கடவுள்
இயேசு கிறிஸ்து : கடவுளின் மகன்
பரிசுத்த ஆவி : கடவுளின் வல்லமை
(தனி நபர் அல்ல)
ஆவியானவர் : மொழி பெயர்ப்பு பிழை மூன்று கடவுள் கோட்பாடுகள் திரித்துவம், திரியேகம், ஏகத்துவம் : சாத்தானின் வஞ்சனைகள்
#மெய்_கிறிஸ்தவம்
ta.ChristianityOriginal.com
Comments
Post a Comment